செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

அறிவாயோ அர்த்தம்???


வானம்விட்டு இறங்கிவிட்டேன் மழைத்துளியாய்!
மண்ணை முத்தமிட்டு கடமையை முடிக்கவா? - அல்லது
கதிரோடு கலந்து வண்ணம்தீட்டி வாழ்வை முடிக்கவா?
குழம்பி நின்றேன் குழந்தையாய்!!!

என் அடையாளம் தொலைத்து ஆண்டுகள்நூறு
               மண்ணில் வாழ்வதைவிட!
நான் நானாக மட்டுமே வாழும்
         அற்ப ஆயுளே சுகமென்று தௌிந்தேன்!!!

                -தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக