அழுதால்தான் அன்னையும் அறிவாள்
குழந்தையின் பசியை!
ஆயிரம் மைல்கள் அப்பாலிருந்தும் - வார்த்தைகளின்றி
உள்ளக்குறிப்பறியும் உண்மை நட்பு!
தாயில் சிறந்த தெய்வமில்லை உலகில்!
ஆனால் தாய்க்கு நிகரான
தங்க உறவுகள் - நண்பர்கள்!
நன்றிக்கு அர்த்தமில்லை
நட்பின் அகராதியில்!
அதனால் கவிவரியில் நன்றியுரைத்தேன்
வரமாய் நண்பர்களைத் தந்த
இறைவனுக்கு!
-- தல்லிதாசன்
அன்பு நண்பர்கள் அருண் மற்றும் ஆனந்துக்கு சிறப்பு அர்ப்பணம்.