ஞாயிறு, 25 நவம்பர், 2012

வெற்றியின் ரகசியம்

அறிவியலின் ஆழம்பார்க்க - மனிதன்
          பிளந்தது அணுவைத்தான்!
                              ஆகாயத்தையல்ல!
உலகை வெல்லத்துடிக்கும் இளைஞனே!
நீ! உன்னை வென்றால்போதும்!
          உலகமே உன் காலடியில்!

                             - தல்லிதாசன்.

மழை

பூமித்தாயின் மடியில் தவழ்ந்து!
        காலத்தின் கோலத்தால் காற்றாகி!
அன்னையின் தாகமொழி கேட்டு
         அரவணைக்க ஓடிவரும்
                                  அன்புக்குழந்தை!

                                  - தல்லிதாசன்.

                                      

சனி, 24 நவம்பர், 2012

ஆசைத்துளிகள்

காதல் மலரின் வாசமறியா
                  வண்டு நான்!
கனவுச் சோலையின் பாதையறியா
                  பறவை நான்!
கவியமுதின் சுவை அறியா
                  குழந்தை நான்!
கொடியிடை கோமகளே! - உன்
        பொன்னிற பிம்பம் என்கண்ணில்
                       தோன்றும் வரை!


கண்முன்னே காட்சிகளாய் நீநிற்க!
        காண்பதெல்லாம் கருவிழியைக்
                                     கொள்ளைகொள்ள!
காண்பது கனவா?! நனவா?!- என்றறிய
என்னை நானே கிள்ளும்போது பிறந்த
         நாதத்தில் அறிந்தேன் என்காதலை! - ஆம்!
நினைவெல்லாம் நித்யமாக!
எண்ணமெல்லாம் ஏஞ்சலாக!
செயலில்கூட என்செல்லம்! நீஇருக்க!
என் வாய்வடிக்கும் வார்த்தைமட்டும்
          எப்படி வேறொன்று! - உன் பெயரைத்தவிர!


வென்பனி மோதி வெந்தது
             என்இதயம்!  - பெண்ணே!
உன் மைவிழிப் பார்வை
             என்னை மையங்கொண்டதால்!


உன்செவ்விதழின் அழகொத்த மலரொன்றை
              காதல் கொண்டு வருடியதால்!
தென்றலாய் முக்திபெற்ற காற்றது!
             என்னைத் தீண்டும்போது - என்
நெஞ்சில் மோதியஉன் நினைவலைகளின்
             மிச்சம் என்கண்களில் கண்ணீராய்!


முகிலின்றி மழை பெற்றேன்
        உன் ஓரவிழிப் பார்வையால்!
செவ்வாயில் கால் பதித்தேன்
         உன் செவ்விதழின் மொழிகேட்டு!
கண்இமைக்கும் நேரத்தில் கடல்கடந்தேன்
          உன் கரம்பிடிக்கும் கற்பனையில்!
இவையெல்லாம் அன்பே!
என் வாழ்க்கைச் சோலை பூத்துகுலுங்கிய!
நம்நினைவில் நாம் மட்டும் நின்ற
         அந்த வசந்த காலத்தில்!
ஆனால் இன்றோ கண்ணீர்கூட எனக்கு
                                             கனவாகிப்போனது!
கல்லாய் மாறிய உன் இதயம் அறிந்து!




                                                - தல்லிதாசன்.

கடவுள்

நாத்திகனின் புத்தியில் புதைந்தவன்
               ஆத்திகனின் வாய்மொழியில் வசிப்பவன்!
நல்லமனிதர்களின் நெஞ்சில் நிறைந்தவன்!
இதோ காண்கின்றேன்!
அக்கடவுள் வாழும் நல்லுள்ளம் கொண்ட 
                என் தெய்வங்களை!
அன்பு பொழியும் அன்னையாக!
          அறிவூட்டும் கல்விதந்த ஆசானாக!
என்கல்விக்கு கரம்கொடுத்த கருணையாளனாக!
          அகம்புறம் அறியவைத்த 
                                       அன்புச்சகோதரர்களாக!

                                          - தல்லிதாசன்.

செவ்வாய், 6 நவம்பர், 2012

வா தோழா வா


வெள்ளநீரைத் தடுக்கும் அணையாய் 
        அங்கே எல்லையில் நம்வீரர்கள்
கண்ணுறங்காமல் நம்தேசம் காக்க!
நாட்டில் பெருக்கெடுத்த சாக்கடைகளின் 
         வாடையறியாமல் உறங்கிக் கிடக்கும் 
                        இளைஞனே!   -  விழித்திடு!

நம்பாரத மண்ணின் பெருமையறி!
அதன்வளங்கள் சுரண்டப்பட்ட 
                 வரலாற்றைப் படி!
வீணர்களின் கையில்சிக்கிய  அதன் 
                   பரிதாபநிலையைப் பார்!
இன்னும் ஏன் தாமதம்?????

உன்னைச் சுத்தமாக்கி  இந்த 
                        நாட்டைச் சுத்தமாக்க
வீறுகொண்டு எழுந்து வா!
ஊழல் ஊதாரிகளை விரட்டியடிக்க!
இலஞ்சப்பேய்களை வஞ்சம் தீர்க்க!
 வீரநடை போட்டு வா!

உலகஅரங்கில் நம் பாரதத்தாயின்
                        பெருமை காக்க!
புறப்பட்டு வா தோழனே!
                        புதுப் புரட்சிப் புனைய!

                                           --  தல்லிதாசன்

 

திங்கள், 5 நவம்பர், 2012

அற்புத மந்திரம்


கனவுகள் பலகண்டு 
                   அதையடையும் வழி கண்டு
உல்லாச உலகில் உரிமம் 
                    பெற்றவன் நீ!

அன்பெனும் அறமறிந்து
        அற்புதங்கள் பலநிகழ்த்த 
ஆனந்த உலகில் அனுமதி 
                 பெற்றவன் நீ!

மெய்ஞானத்தின் மேன்மைபற்றி 
          வாழ்வின் நெறியுரைக்க 
தங்கத் தரணியில் தாள் 
         பதித்தவன் நீ!

இருலொழிக்கும் தீபமாய்!
                எங்கும்  அறிவுச்சுடரேற்ற
இன்ப உலகில் இசைபாடி 
                வந்தவன் நீ!

உற்சாக உளியெடுத்து 
            வெற்றிச் சிலைசெதுக்க
பரந்த பூமியில் பண்பாடு 
            புனைந்தவன் நீ!

நீ இரசித்து மகிழ 
          இதுவெறும் கவியல்ல!
உன் முன்னோரின் 
          பெருமைசொல்லும் துதியல்ல!


உன்மனக் கோவில் தெய்வமாம்!
              ஆனந்தத்தை தரிசிக்க!
அனுதினமும் உனக்குநீயே சொல்லவேண்டிய 
                  அற்புத மந்திரம்!
                                                       -- தல்லிதாசன்










ஆசைத்துளிகள்


கார்மேகக் கூட்டமது 
                      காதலுடன் சேர்கையில் 
வண்ணச் சாமரம் வீசும் 
                        அழகு மயிலின் ஆட்டம் கண்டேன்!
பெண்ணே! 
வெள்ளிக் குடமதின் 
                   வெண்சங்குக் கழுத்தாம் 
                                   உன் இடையில்!


அல்லி மலரிரண்டு 
ஆசையுடன் கூடும்போது 
சிந்திய முத்தம்பட்டு 
நாணத்தால்  சிவந்த  செந்தாமரை 
              கண்டேன் உன் இதழில்!


அன்னநடை நடந்து பின்னழகில் நீ மீட்டும் 
                 வீணைகளின் இனிய கானத்தில்  
காமனவன் மெய் சிலிர்க்க 
கார்முகிலும்  நீர் சொரிய!
காற்றுகூட கீதம் பாட 
நான்மட்டும் நின்றேன் சிலையாய்!
முன்னமே உன்முன்னழகைக் 
                          கண்ட மயக்கத்தில்!


கண்டாங்கிப் புடவை கட்டி 
          கன்னி மணம் வீச 
கழனியில் நீ நடக்கையில்!
கட்டிக் கரும்பு தின்ற 
               குட்டிஎறும்பின் மயக்கம் 
                         இந்தக் காளை மனதில்!


விண்ணின்று வந்த மீனொன்றை
           பிறர்கண்  படாமல் இருக்க 
கரும்பொட்டு வைத்து வரவேற்றாள் 
                              பூமித்தாய்!  - உன் 
தங்கரத மேனியில் கண்களாய் பதிப்பதற்கு!


மொட்டவிழ்த்து பூத்துநின்ற புதுமுல்லையின்
வாசம்தொட்டு வந்த வெண்ணிலா!
மலைத்து நின்றது மண்ணிலிறங்காமல்!
                                         - பெண்ணே!
மன்மதபானமாய் ஒளிவீசும்
                                உன் ஓரவிழிப் பார்த்து !





                                                            -- தல்லிதாசன்















சனி, 3 நவம்பர், 2012

ஏக்கம்


வானத்து விண்மீனாய்  
                    நீ  விளங்க!
உனைக்கண்டு நீர்மீனாய் 
                    நான் ஏங்க !
தணிவதில்லை இந்த 
                   மோக தாகம்! - பெண்ணே!
என்காதல் மலரை 
                     நீ சூடும்வரை!
                                                        -- தல்லிதாசன் 

மழையின் காதல்


நீ மழையில் நனையும் அழகைக்கண்டு
               கண்ணடித்தது மின்னல்!
அதைப்பார்த்து எக்களித்தது இடி! 
                பாவம்! - அதற்கு தெரியாதே!
மழை மண்ணுக்கு வருவதே 
                உண்மேனியைத் தொடுவதற்கென்று!
  
                                           --    தல்லிதாசன்

வெற்றிப்பாதையின் வாசல்


எரிமலையின் சீற்றத்தை  எதிர்கொள்ளும்
                                    ஆற்றல் கொண்டவனே!
மலையை மடுவாக்கிய உனக்கு
                 மண்ணைப் பொன்னக்குவது எம்மாத்திரம்!

தோழா  நீ   துவண்டுவிடாதே
                  தோள்கொடுக்க ஆளில்லையென்று!
உன்தோளை எதிர்நோக்கும்
                  கூட்டமதை எறிந்துவிடாதே!

கண்கலங்கி நீநிற்பது  இதுவே
                                            கடைசியாகட்டும்!
உன்னால் பிறர்சொரியும் ஆனந்தக்கண்ணீர்
                       இனி ஆரம்பமாகட்டும்!

கருணையைக் கண்களில் வை!
                     பாசத்தை நெஞ்சில் வை!
கோபத்தை பிடரியில் வை!
                இதழ்களில் எப்போதும் புன்னகை வை!
ஒழுக்கத்தை மூச்சில் வை!
                 விடாமுயற்சியை விரல்களில் வை!
ஏக்கத்தை மனதில் வைத்து
                        அதன்தாக்கத்தை உலகுக்கு வை!

ஆதவனையண்டும் பீனிக்ஸ் பறவையிடம்
           இலட்சியவேட்கையின் இரகசியம் கேள்!
தன்வலையை தானேபின்னும் சிலந்தியிடம்
            விடாமுயற்சியின் விடையைக் கேள்!
மண்ணை முட்டும் விதையிடம்
             தன்னம்பிக்கையின் தாரகமந்திரம் கேள் !
கடலில்வீசும் அலையிடம் ஓய்வறியா
             உழைப்பின் உள்ளர்த்தம் கேள்!


கூரியவாளாய் நீபெற்ற அறிவோடு
             வாழ்க்கைதந்த அனுபவம் கொண்டு
                          படைத்திடு புது வரலாறு!

நீகாணும் இடமது மடுவாயினும்
            மலையாகமாற்றி அமைத்திடு
                     ஒரு சிம்மாசனம்!
உன்கரம் பிடித்து  நடந்தோரை
                         அமரவைக்க!!!

                                                   - தல்லிதாசன்