தல்லிதாசன்
என் எண்ணங்களின் பிரதிபலிப்போடு என் தாய்க்கு நான் அளிக்கும் சிறிய பரிசு.
புதன், 27 ஆகஸ்ட், 2014
இதயத்தை தேடுகிறேன்!
கண்களில் கனவுகள் கொண்டு!
இதயத்தில் இடம் வைத்தேன்!
என்னுயிரே உனக்காக!!!!
கருவறையின் மேல் கொண்ட காதலை
ஈடேற்ற தவிக்கிறேன் உன் இதயஅறையில்!!!
வந்துவிடு சீக்கிரமாய் இரவெல்லாம் கதைபேச!
இமைப்பொழுதும் நீங்காத நம்நினைவுகளில் இன்பங்கொள்ள!!!!
-தல்லிதாசன்
செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014
அறிவாயோ அர்த்தம்???
வானம்விட்டு இறங்கிவிட்டேன் மழைத்துளியாய்!
மண்ணை முத்தமிட்டு கடமையை முடிக்கவா? - அல்லது
கதிரோடு கலந்து வண்ணம்தீட்டி வாழ்வை முடிக்கவா?
குழம்பி நின்றேன் குழந்தையாய்!!!
என் அடையாளம் தொலைத்து ஆண்டுகள்நூறு
மண்ணில் வாழ்வதைவிட!
நான் நானாக மட்டுமே வாழும்
அற்ப ஆயுளே சுகமென்று தௌிந்தேன்!!!
-தல்லிதாசன்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)