துணையொன்று வேண்டுமென்றோ!
இணையொன்று வேண்டுமென்றோ!
இழக்கும் நொடிகளை
இன்பமாய் கழிப்பதற்கோ!
பிறக்கும் நொடிகளில்
மீண்டும் மீண்டும் களிகூறவோ!
கேட்கவில்லை உன் உறவை!
தள்ளாத வயதிலும்
துணையாகும் மூங்கில் கம்பாய்!
பல்விழுந்த பவள வாயிலும்
உன்சிரிப்பைக் கண்டு என்உலகை ரசிக்க!
உரிமையோடு கேட்கிறேன்
எனக்குத் துணையாய்!
உன் உறவை மட்டும் அல்ல!
உன் உயிரையும் சேர்த்து!
மறுக்காமல் தந்துவிட்டால்
இறக்காமல் வாழ்வேன் உன்னோடு!
— தல்லிதாசன்