வியாழன், 27 டிசம்பர், 2012

உயிரோவியம்

வண்ணமயிலின் தோகை எடுத்து!
புள்ளிமானின் வேகத்தோடு!
கற்பனைக் காகிதத்தில் நான்தீட்டிய
                            அழகோவியம்!
இதோ!
இன்று என்கண் முன்னே!
                          என்னவளாய்!!!

                        - தல்லிதாசன்

சனி, 15 டிசம்பர், 2012

கவிவடித்தேன்

கவி வடித்தேன் நான்! - ஆம்!
விழிசெவி இரண்டின் வேதனையை
         கவிதையாய் வடித்தேன்!

முறத்தால் புலிவிரட்டிய தமிழச்சியின்
            மறத்தை வடித்தேன்!
தன்னலம் மட்டுமே பேணும்பேடியின்
            கயமை விடுத்து!

ஏர்பிடிக்கும் ஏழை   உழவனின்
           கண்ணீரை  வடித்தேன்!
பதுக்கல் பேர்வழிகளின் இரக்கமற்ற
           மனதை விடுத்து!

சுதந்திரக் காற்றை சுவாசிக்க!
            செந்நீர் சிந்திய செம்மல்களின்
                          தியாகம் வடித்தேன்!
இன்றைய ஊழல்ஊதாரிகளின் வாரிச்சுருட்டும்
              வல்லமை விடுத்து!

நம்மகாத்மாவைக் கொன்ற கோட்சேயின்
               தேசத்துரோகம் வடித்தேன்!
அகண்டபாரதம் எனும்அவனது  அளப்பறியா
               ஆவல் விடுத்து!

சொந்தமண்ணுக்கு போராடிய என்சொந்தங்களின்
                துயரம் வடித்தேன்!
அந்தத் துயர்துடைக்கத் துப்பில்லாத - என்
                 வெட்டிப்பேச்சின் வீரம் விடுத்து!

இனிவடிக்கத் துடிப்பதெல்லாம்! ஓர்
                   இனிய கவிதை! - அது!
ஏழைகள் இல்லாத நம்பாரதத்தில்!
எங்கும் பொங்கும் ஆனந்தக்கண்ணீரின்
                  இன்பக் கவிதை!!!

                                               - தல்லிதாசன்







புதன், 12 டிசம்பர், 2012

கண்ணீர்த்துளிகள்

கண்மூடி  வாழ்கிறேன்!
கனவில் மிதப்பதற்கு 
                                  அல்ல!
என் கண்ணீரை 
                       மறைப்பதற்கு!




காணாத முத்தொன்றை 
                                 நான்கண்டேன்!
என்றெண்ணி கையில்கொண்டேன்!
                           கண்ணாடிக்கல்லை!!!
அதுதந்த காயம் ஆறியது உடலில்!
                             மறுக்கிறது மனதில்!


              

மானொன்று மன்றாட! வேடனவன் 
          அறம்மறந்து அதைத் துண்டாட!
ஆண்டுகள் பலஆனாலும் 
            ஆறாத அந்தக் காயத்தால்!
கண்ணீராய் செந்நீர் வடிக்கிறது 
              புறம் புரியாத புள்ளிமான்!





கவிவரியில் கண்ணீர் வடித்தேன்
               என் சோகம் சொல்லி!
அதன்கருத்தைக் கண்டார் இல்லை!
               சொன்னாலும் ஏற்பார் இல்லை!
அதனால் தேடுகிறேன் ஒருஇதயம்!!!
என்தோள் சாய்த்து கதைசொல்ல!
என்கரம் கோர்த்துக் கடக்க 
                இந்த வாழ்க்கைக் கரையை!!!

                                                          - தல்லிதாசன்

திங்கள், 10 டிசம்பர், 2012

என்னை ஏன் மறந்தாய்?

ஆழ்கடலில் தோன்றும் ஆதவனைக்
                கண்டு அதிசயித்தோம்!
நாம் அறிமுகமான போது!

காற்றோடு கதைபேசும் இலைகளின் 
                 அழகை ரசித்தோம்!
நாம் பழகிய போது!

சிப்பியின்சிறப்பால் முத்தாய் மாறிய 
                 பனித்துளியை ரசித்தோம்!
நம்காதலை உணர்ந்தபோது!

கரையோடு பேசத்துடிக்கும் அலைகள்
          தயக்கத்துடன் திரும்பிய 
                       அழகை ரசித்தோம்!
நாம் காதலைச்சொல்ல தயங்கியபோது!

தவழும் தென்றலின் தாலாட்டுகேட்டு 
          தலையாட்டிய ரோஜாவை ரசித்தோம்!
நம் காதலை பரிமாறியபோது!

இப்படி நாம்பழகிய இனியநினைவுகளை 
          நீக்கமற நெஞ்சில் நிறுத்தவா! 
                         என்னை மறந்தாய்!????  - பெண்ணே!
உன் பரந்தமனதில் இடமில்லாமல்!

                                        - தல்லிதாசன்.