சனி, 5 ஜனவரி, 2013

முக்கோணக் காதல்

கற்பனைக் காற்றினில் காகிதமாய்
                               நான் பறந்து!
விண்ணைத் தொட்டு
                       பிரதியெடுத்தேன்!
வெண்ணிலாவின் பால்முகத்தை!

வண்ணங்கள் சங்கமித்த
          முத்துப்பேழையில் மூடிவைத்தேன்!
அந்த அழகோவியத்தை!

இந்த ஆடவனின் கைத்தொட
பூத்துநின்ற முழுமதியவள்
          நாணித்தான் போனாள்!
மூன்றாம் பிறையாக!
கொண்டவன் நெற்றியில்
                திலகமாய் வீற்றிருக்க!

இதையறியாத ஆதவன்!
கீழ்த்திசையில் கண் விழித்து!
மேல்திசை நோக்கி தெடுகிறான்
இந்த அழகு தேவதையை!

                                 - தல்லிதாசன்


                           

2 கருத்துகள்:

  1. அருமை.... உன் உவமையை விவரிக்க வார்த்தை இல்லை...

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு