வியாழன், 10 ஜனவரி, 2019

ஏனிந்த காதல்

துணையொன்று வேண்டுமென்றோ!
இணையொன்று வேண்டுமென்றோ!
இழக்கும் நொடிகளை
இன்பமாய் கழிப்பதற்கோ!
பிறக்கும் நொடிகளில்
மீண்டும் மீண்டும் களிகூறவோ!
கேட்கவில்லை உன் உறவை!

தள்ளாத வயதிலும் 
துணையாகும் மூங்கில் கம்பாய்!
பல்விழுந்த பவள வாயிலும்
உன்சிரிப்பைக் கண்டு என்உலகை ரசிக்க!
உரிமையோடு கேட்கிறேன் 
எனக்குத் துணையாய்!
உன் உறவை மட்டும் அல்ல! 
உன் உயிரையும் சேர்த்து!
மறுக்காமல் தந்துவிட்டால்
இறக்காமல் வாழ்வேன் உன்னோடு!

                             — தல்லிதாசன்


அனுமதி தருவாயா??

உலகின்
மொத்த அழகையும்!
ஒற்றை வார்த்தையில்!
கவிதையாய் கிறுக்க
நெடுநாட்களாக ஆசை!

அனுமதி தருவாயா??
உன்பெயரை ஒருமுறை கிறுக்க!

                    — தல்லிதாசன்

தனிமை

ஆளில்லாத தீவில்!
முள்ளில்லாத காட்டில்!
 காட்சிகளை பதப்படுத்தி
கவிதை புனைந்து!
என் கனவுக்கு உருவங்கொடுத்து
கதைகள் படைத்து!
எனக்கான பாதையில் 
ஓர் இனிய பயணம்!

பாதை முடியுமா? இல்லை
பயணம் முடியுமா? நான்றியேன்!
ஆனால்!
பொழுது மட்டும் விடிந்து கொண்டிருக்கிறது! 
அதில்!
நாட்கள் தான்  கழிந்து கொண்டிருக்கின்றன!

                                  — தல்லிதாசன்


இதயத்தின் வலி

உன் இதயம் கவரவே!
உருகித் தவிக்கிறேன்!

என் இதயம் புரியவே!
கவிதை அனுப்பினேன்!

மழையின் சாரல் மனதில் வீச!
இதயம் ஏனோ அனலில் வாடுது!

மலையின் பாரம் பனியாய் மாற!
மலரின் தேனோ மடுவில் சேருது!

இன்பமும் துன்பமும் வாழ்வின் அங்கமாம்!
ஆனால் எனக்கோ!
இன்பத்தின் அங்கமாய் துன்பமும்!
துன்பத்தின் அங்கமாய் இன்பமும்!
இரண்டறக் கலந்தது! - காரணம்!
என் வாழ்வின் மொத்தமாய் நீ இருக்கிறாய்!

                                   — தல்லிதாசன்

தீட்டு

என் உதிரத்தைத் 
தீட்டாய் கருதும்
 உன் புனிதம்
எம் தலைமுறைக்கே தீட்டு!

இப்படிக்கு
அந்த உதிரத்தோடு உடல் கிழித்து!
இந்த உலகை உனக்குக் கொடுத்த!
உன் அன்னை போல் ஒருத்தி!


                                -- தல்லிதாசன் 

வியாழன், 3 ஜனவரி, 2019

மௌனம் வேண்டாமே

தானாய் அரும்புது நீர்த்துளி
உனைத்தேடும் விழிகளின் ஓரம்!

மெலிதாய் பூக்குது புன்னகை!
உனைப்பாடும் இதழ்களின் ஓரம்!

மலரால் கூடுது பாரம்
உனைதாங்கும் இதயத்தின் ஓரம்!

சொல்லாத வார்த்தையில் துளிர்விட்ட பந்தம்!
சொல்லிய வார்த்தையால் தவிக்குது நெஞ்சம்!

விழிகள் காணாத உயிரின் ஒளியை
இதயத்தில் கேட்கிறேன் உயிரின் ஒலியாய்!

கோபம் இருந்தால் மோதித் தணித்துவிடு
கள்ள மௌனத்தை உள்ளம் தாங்காது!

இப்படிக்கு!
கால் ஒடிந்த காலத்தை 
கடக்க முடியாமல் தவிக்கும்
கனத்த இதயத்தின் மனசாட்சி!

                              — தல்லிதாசன்

அனுமதி தருவாயா??

உலகின்
மொத்த அழகையும்!
ஒற்றை வார்த்தையில்!
கவிதையாய் கிறுக்க
நெடுநாட்களாக ஆசை!

அனுமதி தருவாயா??
உன்பெயரை ஒருமுறை கிறுக்க!

                    — தல்லிதாசன்

தனிமை

ஆளில்லாத தீவில்!
முள்ளில்லாத காட்டில்!
 காட்சிகளை பதப்படுத்தி
கவிதை புனைந்து!
என் கனவுக்கு உருவங்கொடுத்து
கதைகள் படைத்து!
எனக்கான பாதையில் 
ஓர் இனிய பயணம்!

பாதை முடியுமா? இல்லை
பயணம் முடியுமா? நானறியேன்!
ஆனால்!
பொழுது மட்டும் விடிந்து கொண்டிருக்கிறது! 
அதில்!
நாட்கள் தான்  கழிந்து கொண்டிருக்கின்றன!

                                  — தல்லிதாசன்