கல்லைக் காட்டி கடவுள் என்றனர்
காரணம் கேட்டேன்! கதை சொன்னார்கள்!
ஆதியந்தம் அற்றவன் என்றார்கள்! ஆண்டவனை!
அறைக்குள் அவனை பூட்டிய அதிமேதாவிகள்!
பிறன்மனை நோக்காதே என்றான் வள்ளுவன்!
அதை மறந்தவனை ஆண்டவன் என்கின்றனர்!
கதிரியக்கத்தை கணக்கிட்டு கட்டிய கலைக்கூடத்தை
கோயில் என்றனர் உடலுழைப்பை மறுத்தவர்கள்!
சந்திரன் சூரியனனெ இறைவன் படைத்த
பொருளை வணங்கும் பொல்லாத மனிதர்களே!
அனைத்து மனிதர்களும் இறைவனின் படைப்புதான்!
ஏற்றத் தாழ்வுகள் ஏதுமின்றி ஏற்றிடுங்கள்!
கடவுளாகக்கூட அல்ல மனிதனை மனிதனாக!
- தல்லிதாசன்