கண்ணிமையில் உனைவைத்து கைவிரலில் நான்தீட்டிய உயிரோவியம்!
அதைக்காண வந்த வெண்ணிலவை அந்தரத்தில் நிறுத்தியது!
கருமையால் தீட்டப்பட்ட உன்கார்கூந்தலை தழுவநினைத்த தென்றலின் வேகம்!
ஆயிரம் விண்மீன்களின் பொலிவு கொண்ட உன்நிழல்முகம் கண்டு!
வெட்கத்தால், முகம்மூட முகிலின்றி மேற்கில் மறைந்தான் ஆதவன்!!!
இவையேதும் அறியாமல்! ஆகாயத்தை கடந்து போனேன்! இமையோடு உனைவைத்த இன்பத்தால்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக