வியாழன், 26 மார்ச், 2015

ஏற்பாயா என் காதலை?:::




கரையோரம் பூக்கள் சொறிந்தன மரங்கள்!
நதியிடம் தன் காதலைச் சொல்ல!

நீலக் கடலின்மேல் பட்டாடை போர்த்தினான்
கதிரவன்! தன் காதலைச் சொல்ல!

மழைத்துளி கொண்டு முத்தமிட்டான் வானமகன்!
நிலமகளிடம் தன் காதலைச் சொல்ல!

நிலவோடு நடை பழகின மேகங்கள்!
அடங்காத தன் காதலைச் சொல்ல!

உன்விழி பேசும் மொழியை அறிந்து!
உம் எண்ணத்தில் என்னைக் கலக்க!

ஆவலாய் காத்தி ருக்கிறேன் நான்!
ஆசையாய் என் காதலைச் சொல்ல!
                -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக