பணியில் நானிருந்தால்
என்மனதை உனைநோக்கி
பறக்க வைத்தாய்!
என்மனதை உனைநோக்கி
பறக்க வைத்தாய்!
வீதியில் நான்நடந்தால்
இதயத்தை உன்நினைவில்
துடிக்க வைத்தாய்!
இதயத்தை உன்நினைவில்
துடிக்க வைத்தாய்!
உள்ளத்தில் நீயிருந்து
உண்ணும் உணவில்
நாட்டம் குறைத்தாய்!
உண்ணும் உணவில்
நாட்டம் குறைத்தாய்!
உறங்கினாலும் கனவில்
முத்தமழையால் நெஞ்சில்
காயம் தந்தாய்!
முத்தமழையால் நெஞ்சில்
காயம் தந்தாய்!
வயதுத் தீயில் வாடிய
என்வதனம் காண வாராயோ!
என்வதனம் காண வாராயோ!
ஏக்கத்தால் களையிழந்த
என்தேகம் காண வாராயோ!
என்தேகம் காண வாராயோ!
காத்தருக்கிறேன் நான்! - பெண்ணே
நம்நிழல்களை நிழலாக்க!!!
நம்நிழல்களை நிழலாக்க!!!
- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக