வியாழன், 3 ஜனவரி, 2019

மௌனம் வேண்டாமே

தானாய் அரும்புது நீர்த்துளி
உனைத்தேடும் விழிகளின் ஓரம்!

மெலிதாய் பூக்குது புன்னகை!
உனைப்பாடும் இதழ்களின் ஓரம்!

மலரால் கூடுது பாரம்
உனைதாங்கும் இதயத்தின் ஓரம்!

சொல்லாத வார்த்தையில் துளிர்விட்ட பந்தம்!
சொல்லிய வார்த்தையால் தவிக்குது நெஞ்சம்!

விழிகள் காணாத உயிரின் ஒளியை
இதயத்தில் கேட்கிறேன் உயிரின் ஒலியாய்!

கோபம் இருந்தால் மோதித் தணித்துவிடு
கள்ள மௌனத்தை உள்ளம் தாங்காது!

இப்படிக்கு!
கால் ஒடிந்த காலத்தை 
கடக்க முடியாமல் தவிக்கும்
கனத்த இதயத்தின் மனசாட்சி!

                              — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக