திங்கள், 10 டிசம்பர், 2012

என்னை ஏன் மறந்தாய்?

ஆழ்கடலில் தோன்றும் ஆதவனைக்
                கண்டு அதிசயித்தோம்!
நாம் அறிமுகமான போது!

காற்றோடு கதைபேசும் இலைகளின் 
                 அழகை ரசித்தோம்!
நாம் பழகிய போது!

சிப்பியின்சிறப்பால் முத்தாய் மாறிய 
                 பனித்துளியை ரசித்தோம்!
நம்காதலை உணர்ந்தபோது!

கரையோடு பேசத்துடிக்கும் அலைகள்
          தயக்கத்துடன் திரும்பிய 
                       அழகை ரசித்தோம்!
நாம் காதலைச்சொல்ல தயங்கியபோது!

தவழும் தென்றலின் தாலாட்டுகேட்டு 
          தலையாட்டிய ரோஜாவை ரசித்தோம்!
நம் காதலை பரிமாறியபோது!

இப்படி நாம்பழகிய இனியநினைவுகளை 
          நீக்கமற நெஞ்சில் நிறுத்தவா! 
                         என்னை மறந்தாய்!????  - பெண்ணே!
உன் பரந்தமனதில் இடமில்லாமல்!

                                        - தல்லிதாசன்.


4 கருத்துகள்:

  1. உங்கள் கவிதை அழகாக இருக்கிறது ........... இது காதல் தொலைந்த கனத்தினால் எழுதப்பட்ட காவியமா இது .........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இது தன் காதலை தொலைத்த என் நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க நான் எழுதிய கவி.

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு