அந்தி மாலைப் பொழுதினிலே!
அகிலம் இருளத் தொடங்கயிலே!
கர்வம் கொண்டு வந்ததன்று
அகிலம் இருளத் தொடங்கயிலே!
கர்வம் கொண்டு வந்ததன்று
பௌர்ணமி நிலவொன்று!!!
ஆர்ப்பரித்த தென்றலது! தவப்பயனாய்
தரணி கருதும் தங்கச்சிலையவள்
பின்னழகில் கிறங்கிய சிகையை !
மேகமாய்த் தவழவிட்டு சந்திரனுக்கு
மேகமாய்த் தவழவிட்டு சந்திரனுக்கு
சமிக்ஞை காட்ட!
வெகுண் டெழுந்த மயிரிழைகள்
மயில் தோகையாய்! வளம்கொண்ட
அவள் வதனம் மறைக்க !
அடங்காத இளங்காற்றும் சண்டையிட!
அடங்காத இளங்காற்றும் சண்டையிட!
வில்லாய் வளைந்த கேசமது
இதழிடுக்கில் இடம்பிடிக்க! அவ்வில்லில்
நாண்பூட்ட ஆதவன் அனுப்பினான்
தன்னிளங் கதிரை! வெட்கப்பட்ட
வெள்ளி நிலாவும் தவமிருந்தது!
ஈடில்லா அவ்வழகைப் பெற!
மூன்றாம் பிறையாய் உடலை
வருத்தியும்! எட்டாக் கனியான
எழிலை நினைத்து! நித்தம்
உருகி அமாவாசை இரவில்
அமைதியாய் மாய்த்தது தன்னை!!!
வருத்தியும்! எட்டாக் கனியான
எழிலை நினைத்து! நித்தம்
உருகி அமாவாசை இரவில்
அமைதியாய் மாய்த்தது தன்னை!!!
- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக