மண் குடிசையில் வாழ்ந்தாலும்
மனிதாபிமானத்தில் மன்னர்கள் நாம்!
மனிதாபிமானத்தில் மன்னர்கள் நாம்!
எதிரியையும் நாணச் செய்யும்
விருந்தோம்பலின் விற்பன்னர்கள் நாம்!
விருந்தோம்பலின் விற்பன்னர்கள் நாம்!
செய்நன்றி மறவாத மனதால்
நன்றியுணர்வு நிறைந்தவர்கள் நாம்!
நன்றியுணர்வு நிறைந்தவர்கள் நாம்!
பொறியியல் மருத்துவம் கலையென
அறிவியலின் ஆதாரம் நாம்!
அறிவியலின் ஆதாரம் நாம்!
புறமுதுகை புறக்கணிக்கும் நெஞ்சுரத்தில்
வீரத்தின் விளைநிலம் நாம்!
வீரத்தின் விளைநிலம் நாம்!
வீரத்தால் வெல்ல முடியாததால்
வஞ்சனையால் வீழ்த்தினர் நம்மை!
வஞ்சனையால் வீழ்த்தினர் நம்மை!
ஆம்!சாதி மதம் மொழியென
நஞ்சை கலந்தனர் நம்நெஞ்சில் !
நஞ்சை கலந்தனர் நம்நெஞ்சில் !
நம்கரத்தால் நம்கண்களை குருடாக்கி
அளவின்றி அபகரித்தனர் நம்செல்வங்களை!
அளவின்றி அபகரித்தனர் நம்செல்வங்களை!
வாழ வழின்றி தவித்தவர்கள்
நம்மை அடிமையாக்கி ஆள்கின்றனர்!
நம்மை அடிமையாக்கி ஆள்கின்றனர்!
ஏனிந்த அடிமைத் தூக்கம்!
எழுந்துநில் சற்று சிந்தித்துப்பார்?
எழுந்துநில் சற்று சிந்தித்துப்பார்?
உன்னைப் படைத்த இறைவனிடம்
நீபேச, வேண்டுமோ ஓர்தரகர்!
நீபேச, வேண்டுமோ ஓர்தரகர்!
வியாபாரம் பேசி விலைக்கு
வாங்க வேண்டுமா சந்தோசத்தை!
வாங்க வேண்டுமா சந்தோசத்தை!
அகற்று உன் அறியாமையை
ஆண்டவன் தெரிவான்!
ஆண்டவன் மட்டுமே தெரிவான்!
ஆண்டவன் தெரிவான்!
ஆண்டவன் மட்டுமே தெரிவான்!
- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக