நல்மார்க்க நதியில் பயணித்து
இறைவன் என்னும் பெருங்கடலை
அடைய உதவும் பரிசல்!
இறைவன் என்னும் பெருங்கடலை
அடைய உதவும் பரிசல்!
நீயோ! சாதியெனும் அறைகள்
பலகொண்ட கப்பலைக் கட்டினாய்!
அறைக்குள் மக்களைப் பூட்டி
அதிகாரம் படைத்தவன் நானெ்றாய்!
உம்தலைக் கணத்தின் சுமையால்
சேற்றில் அமிழ்ந்தது கப்பல்!
நல்மார்க்க வழியை விடுத்து
எங்கே செலுத்துகிறீர் மதத்தை?
நீங்கள் பூட்டிய அறைகள்
காலியாகும்! சேதங்கள் அதிகமாகும்!
நீதடுக்க நினைத்த நதியில்
உன்கப்பலும் கரைந்து போகும்!
நீதடுக்க நினைத்த நதியில்
உன்கப்பலும் கரைந்து போகும்!
இறைவனை அடைய விரும்பினால்!
மதத்தை விட்டொழி யுங்கள்!
நல்ல மார்க்கத்தை போற்றுங்கள்!
சாதியை தூக்கி எறியுங்கள்!
உலக உயிர்களை நேசியுங்கள்!
- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக