உரிமைக் குயிலின் உணர்ச்சி கீதத்தை
கண்ணீரின் இரைச்சலில் கரைத்து!
காலம் தந்த இரைச்சலை
இனிய கானமென எண்ணி!
கண்ணீருடன் கடக்கிறேன் கடந்த காலத்தை!
உன்கரம் பிடித்து நடந்த வசந்தகாலத்தை!
மீண்டும் வசந்த காலமாய் வந்து
வாழ்வு தர வேண்டாம்!
தவழும் தென்றலாய் ஒருநொடி வந்துவிடு
என் வாழ்க்கைச் சோலையில்!
வாழ்வின் வசந்தம் அனைத்தையும்
அதே நொடியில் அனுபவித்து விட்டு!
மறுநொடியே தொழுது நிற்பேன்
உன் பாதங்களை! உதிர்ந்த மலராக!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக