கொத்து கொத்தாய் குண்டு வீசி!
குழந்தைகளைக் கொன்று வீசியும்!
அடங்கவில்லையோ உனக்கு
உலகாளத் துடிக்கும் வல்லாதிக்கப் பசி!
எங்கள் இனமழித்த ஈரமின்னும்
காயவில்லை ஈழத்தில்!
மீண்டும் ஏனிந்த குருதிதாகம்?
பிஞ்சுக் குழந்தைகளின் உடலெங்கும்
சிதறி உறைந்த உதிரமும்!
எஞ்சிய குழந்தைகளின் கன்னங்களை
நிறைத்த வறண்ட கண்ணீரும்!
மரித்துப் போன உன்மனிதநேயத்தின்
கல்லறையில் தூவும் மலர்கள்!
அந்த மலர்கள் தான்
உன் மரணத்தின் வாசல்... மறவாதே!
இது என் கூற்றல்ல!
வரலாறு வழங்கிவரும் தீர்ப்பு!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக