ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

வீதிக்கு வாருங்கள் தோழர்களே!

வீதிக்கு வாருங்கள் தோழர்களே!
இழந்த உரிமைகளை மீட்க!
இருக்கும் வளங்களைக் காக்க!
வீதிக்கு வாருங்கள் தோழர்களே!

புரட்சிகள் இன்றி!புது சரித்திரம் இல்லை!
புதிய சரித்திரத்தின் முகவுரை  எழுதி!
நமது சந்ததிகளின் முடிவுரை தடுத்திட!
வீதிக்கு வாருங்கள் தோழர்களே!

என்வீட்டு நீச்சல்குளம் நிரப்புவதற்கு அல்ல!
நாளை நம்வீட்டு அடுப்பில் உலைகொதிக்க!
காவிரி வேண்டும் தமிழ் நாட்டிற்கு!
வீதிக்கு வாருங்கள் தோழர்களே!

மண்ணை மலடாக்கி! மருந்தை உணவாக்கி!
பிஞ்சுக் குழந்தைக்கும் நஞ்சை கொடுக்கும்!
கொலைகாரத் திட்டங்களை குப்பையில் எறிய!
வீதிக்கு வாருங்கள் தோழர்களே!

தேர்தல் களத்தில் வாக்கு ஆயுதம்!
இனியும் உதவாது நமக்கு! உடனே
மீட்போம் உரிமையை! தமிழனாய் இணைந்து
வீதிக்கு வாருங்கள் தோழர்களே!

ஆம்!

வீதிக்கு வாருங்கள் தோழர்களே!
உரிமைக்கு குரல்கொடுக்கும் போராட்டத்திற்கு அல்ல!
உணர்வுக்கு உருகொடுக்கும் புரட்சி மலர!
வீதிக்கு வாருங்கள் தோழர்களே!

                        — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக