ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

வீரம்கொள்

மண்ணில் பயிர் வளர்த்து!
பயிர் வழியே உயிர் வளர்த்து!
உயிரினும் மேலாய் தமிழ் வளர்த்து!
தமிழ் வழியே அறம் வளர்த்து!
அறநெறியில் மறம் வளர்த்து!
மறத்தால் நாட்டின் அரண் அமைத்து!
சீறிய வேங்கைகளை சிதறவிட்ட வீரம்!
குள்ளநரியின் சூழ்ச்சிக்குப் பணிவதா?

வீறுகொள் தமிழினமே!
விவேகத்தோடு சற்றே வீரம்கொள்!

                               — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக