ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

என்னவன்


நிலையில்லா சோலையில்
நிறம் மாறும் பூக்களிடம்
தொலைத்து விட்ட என்னை!
மீட்டெடுத்த தென்றல் அவன்!

சமூகச் சூழலில் நான்
தடுமாறிய தருணங்களில்
என்னை எனக்கே 
அறிமுகம் செய்தவன் அவன்!

எத்தனை கோபப்பட்டாலும்
என்மீதான அன்பை
துளியும் குறைக்காத
இரண்டாவது ஜீவன் அவன்!

கரம்நீட்ட உறவின்றி நான்
கலங்கி நிற்கையிலும்
கவிநீட்டி என்கண்ணீர்
துடைத்தவன் அவன்!

உடலில்லாத உயிர் அவன்!
அவனை நீங்கிவிட்டால்
உயிரில்லாத பிணம் நான்!

என்னையும் கவிஞனாக்கி
அழகு பார்க்கும்! 
என்னவனின் பெயர்!
தல்லிதாசன்!

                             — செல்வராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக