கமலம் போல் கரம்குவித்து! அதில்!
உன்அல்லி முகம் அள்ளிஎடுத்து!
நெற்றி வருடும் கற்றை முடியை!
ஒற்றை விரலால் ஒதுக்கி விட்டு!
உன்விழி என்னும் என் உலகினில்!
என்முகம் பார்க்கும் ஆவலில்!
காற்றை விலக்கி உன்கண்களை நெருங்க!
பதட்டத்தில் துடிக்கும் நம்இதழ்கள்
ஒன்றையொன்று தாங்கிப் பிடிக்க!
உன்இதழ் சிந்தும் தேன்பட்டு!
என் உறக்கம் கலைந்தேன்!
ஓ!
இதுதான் உறக்கம் துரத்தும் காதலோ?
ஒருமுறையேனும் நேரில் வந்துவிடு
இந்தக் கேள்விக்கு பதிலளிக்க!
இப்படிக்கு!
உனக்காக காத்திருக்கும்
ஒற்றை ஜீவன்!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக