கண்ணீரில் மூழ்கிடும்
படகானது என்விழி!
கனவோடு கரைந்திடும்
காலம்தான் என்விதி!
என்மனம் குளிர
அன்பைப் பொழியும்
மேகமென உனை நினைத்து!
தென்றலை நான் தூதுவிட்டேன்!
வருடிய தென்றலில்
வண்ணங்கள் இல்லையென்றா
கலைந்து சென்றாய்?
என் கன்னங்களை குளிர வைத்து!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக