தேர்தல் பெயரில் நடக்குது கூத்து!
சிவப்புத் தாளில் அடிக்குது காத்து!
பணநாயகம் ஆடிய ஆட்டத்தில் நேத்து!
ஜனநாயகம் இங்கே வீழ்ந்தது தோத்து!
இலவசமில்லா தேர்தலில்லை!
இடைத்தேர்தலுக்கு விலக்குமில்லை!
ஓட்டுக்குத் துட்டு அனுமதியில்லை!
அதனை யாரும் மதிப்பதுமில்லை!
வாக்கு மட்டுமல்ல!
வாக்குக்குப் பணமும்
ஜனநாயக உரிமையானது!
தேர்தல் ஆணையமும்
அரசியல் கட்சிகள்
கையிலாடும் பாவையானது!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக