ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

வேண்டும் வேண்டும் விடுதலை!

வேண்டும் வேண்டும் விடுதலை!
தாய்மண்ணை மீட்க தலைமுறை காக்க!
வேண்டும் வேண்டும் விடுதலை!

வரிகள் கொடுத்தோம் சட்டத்தின்
வரிகளை மதித்து!
நீதிமன்ற கதவுகளைத் தட்டினோம்
நீதியை மதித்து!
ஓர்மை துறந்து உறவாடினோம்
ஒருமைப்பாட்டை மதித்து!
இந்தியனாய் வாழ்ந்து வந்தோம்
இறையாண்மையை மதித்து!
ஆனால்!
எங்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க
உனக்கு மனமில்லை!

எங்கள் வரிப் பணத்தில்
எம்மண்ணின் வளங்கள் சுரண்டி!
சுரண்டிய இடத்தில் குழிகள் வெட்டுகிறாய்
எங்கள் தலைமுறையின் தகனத்திற்கு!

வான்மழையும் பொய்த்துப் போக!
வாழவைத்த காவிரியும் சிறையிருக்க!
வறண்ட கண்ணீரோடு விவசாயிகள்!

மண்ணின் வளம் காக்க!
எங்களின் இனம் காக்க!
வீதியில் போராடும் தோழர்கள்!

அமைதிப் பூங்காவாய் ஆர்ப்பரித்த பூமியில்
ஆர்ப்பாட்டம் இல்லாத விடியலை காணவில்லை!
மக்கள் வாழத்தான் நாடும் அரசும்!
எங்களை அழிக்கத் துடிக்கும்
கொலைகார அரசும் எனதல்ல!
இந்தியாவும் என் நாடல்ல!

இந்தியனே வெளியேறு!

வேண்டும் வேண்டும் விடுதலை!
தாய்மண்ணை மீட்க தலைமுறை காக்க!
வேண்டும் வேண்டும் விடுதலை!

                                  — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக