அகலமாய் விழிகள் விரித்து
தனியே நான் ரசித்த
அதிசய அருவியை
உன்னோடு நான் ரசிக்கும்
என் கனவை எப்படிச் சொல்வேன்!
தோளில் தலை சாய்த்து
விரல்களில் நெட்டு உடைத்து
நீ விரும்பிய வீதிகளில்
உன்னோடு நடை பழகும்
என் கனவை எப்படிச் சொல்வேன்!
உள்ளத்தின் அன்பிற்கு
உறுதிப்பத்திரம் எழுத தெரியவில்லை!
ஆனால்!
ஒன்று மட்டும் நிச்சயம்!
உடல் மட்டும்தான் என்னோடு!
உயிர் என்றுமே உன்னோடு!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக