ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

திருமணம்

வில்லென புருவம்
படர்ந்த நெற்றியில் 
பொட்டும் வைக்கவில்லை!

ஆபரணங்கள் இல்லாத
அழகான கழுத்தில்
அர்த்தமற்ற தாலியும் கட்டவில்லை!

மனைவியாய் உன்னை
ஏற்று வாழ்வதற்கு!
கணையாழியும் அணிவிக்க வில்லை!

கணுக்கால் தாண்ட
சண்டையிடும் வெள்ளித்
தண்டையும் அணிவிக்க வில்லை!

கமலத்தின் மென்மை 
மிஞ்சிய கால்விரலில்
வெள்ளி மெட்டியும் பூட்டவில்லை!

ஏனென்றால்!

விழிகளில் காதலைப் பரிமாறி!
விரல்களின் தீண்டலில் நாம்நடத்திய
திருமணத் திருவிழாவிற்கு ஒவ்வாத
ஆடம்பரங்கள் அவை!

                              — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக