ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

புறப்படு புரட்சிக்கு

என்னடா நடக்குது என்நாட்ல!
அடிப்படை உரிமை மறந்து
மீண்டும் அடிமையாய் வாழ
பயிற்சி எடுக்கிறாயோ தமிழா!

எதிர்வினை ஆற்றும் எறும்பின்
துணிவும் எதற்கென்று எண்ணி
முடங்கிப் போனாயோ வீட்டுக்குள்ளே!

உயிர்காக்க உதவி இல்லை!
ஏழைக்கு ஏற்றம் தரும்
கல்விக்கு உரிமை இல்லை!

உழவுக்கும் உயிருக்கும் நீரில்லை!
இன்னும்!நீ உறங்கிக் கிடந்தால்
உன்உழைப்பும் உயிரும் உனக்கில்லை!

அறம் வளர்த்த அசுரனே!
சூழ்ச்சிகளைத் தூளாக்கப் புறப்படு!
தீர்வை நோக்கிய புரட்சிக்கு!

                             — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக