ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

முகமூடி மனிதர்கள்

சுட்டெரிக்கும் சூரியன்
தரும்கானல் நீர்தான்! - இந்த
முகமூடி மனிதர்களின்
உதட்டோர சிரிப்பும்!

உதட்டுச் சிரிப்பில்
உள்ளம் நெகிழாதே!
மெய்பொய் எதுவென
ஆராய தவறாதே!

மூடியில்லா மனமாயினும்
முழுதாய் நம்பாதே!
மூடிபோட்ட முகமாயின்
துளியும் நம்பாதே!

                   -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக