சனி, 5 செப்டம்பர், 2015

குடிமகன்கள் கவனத்திற்கு:::

மதுகுடிக்க செல்லும் மடையர்களே!
சற்றே நில்லுங்கள்!

பகைவனைத் தேடி செல்வதேனோ?
உங்கள் பகுத்தறிவை மறந்து!

ஆம்! - மது

உன் உயிருக்குப் பகைவன்!
உன்பெற்றோரின் நிம்மதிக்குப் பகைவன்!
உன்மனைவியின் கனவுகளுக்குப் பகைவன்!
உன்பிள்ளைகளின் எதிர்காலத்திற்குப் பகைவன்!
இச்சமூகத்தின் அமைதிக்குப் பகைவன்!

கிடைப்பதால் குடிக்கிறேன் என்று
பொய்க் காரணம் கூறாதே!

துணிக் கடைகளைக்  கண்டு
தாய்க்கு சேலைவாங்க தோன்றியதுண்டா தினமும்!

கண்கவரும் நகைக் கடைகள் ஆயிரமுண்டு!
உன்மனைவிக்கு ஒரு மூக்குத்தியேனும் தேடியதுண்டோ!

தரமான பள்ளிகள் தாராளமாய் உள்ளன!
அவற்றில் உன்பிள்ளைகளுக்கு இடம் தேடியதுண்டா?

வாய்ப்புகள் ஆயிரம் உண்டு!
வாழ்வதற்கும்! சாவதற்கும்!

தொழில் வளர்ச்சியைப் புறந்தள்ளி!
வியாபாரி யாகிவிட்ட
அரசாங்கமும் ஆட்சியாளர்களும்
நாம் வாங்கிக்கொண்ட சாபம்!

வியாபாரத்தை விரிவாக்குவதை
அவர்கள் கடமையாய்க் கருதலாம்!

உன் கடமை என்ன?

சற்றே சிந்தித்துப் பார்!
பகுத்தறிவைப் பாரமாய் நினைத்து
பாதாளத்திற்கு வழி தேடாதே!

                           -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக