மொட்டுக்களை திறக்க
அலைமோதும் தென்றல்போல்
உம் மனதை திறக்க தவிக்கிறேன்!
உம் மனதை திறக்க தவிக்கிறேன்!
பார்த்தவுடன் வரவில்லை உம்மேல் ஆசை!
உம்மோடு பழகிய இனிமையில் வந்ததது!
உம்மோடு பழகிய இனிமையில் வந்ததது!
கேள்விகள் கேட்க ஆசை உம்மை அறிய!
ஏனோ தடுக்கிறது மனது!
உமக்கு தொல்லை கொடுக்க கூடாதென்று!
ஏனோ தடுக்கிறது மனது!
உமக்கு தொல்லை கொடுக்க கூடாதென்று!
விழிகளில் என்றும் உம் பிம்பம்!
இதயத்தில் என்றும் உம் நினைவுகள்!
இதயத்தில் என்றும் உம் நினைவுகள்!
செவிகளில் என்றும் உம் குரல்!
இதழ்களில் என்றும் உம் பெயர்!
இதழ்களில் என்றும் உம் பெயர்!
வரமாகக் கேட்டேன் இறைவனிடம்! அவனோ
முடிவை உம்கையில் கொடுத்து விட்டான்!
முடிவை உம்கையில் கொடுத்து விட்டான்!
நானறிவேன் நிச்சயம் இது காதலல்ல!
அதேநேரம் இச்சை கொண்ட காமமுமல்ல!
அதேநேரம் இச்சை கொண்ட காமமுமல்ல!
உம்மேல் கொண்ட அன்பென்னும் விதை!
செடியாய் வளர்ந்துவிட்ட செய்தியை சொல்கிறேன்!
செடியாய் வளர்ந்துவிட்ட செய்தியை சொல்கிறேன்!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக