சனி, 5 செப்டம்பர், 2015

உனைக் கரம்பிடிக்கும் வரம்கிடைத்தால்

உன் நெற்றியில் முத்தமிட்டு 
எழுப்புவேன்!
நீ எழும்ப மறுத்தால்
என் இதழ்களால் உன்
விழிகளைத் திறப்பேன்!

எழுந்து நின்று நீ
சோம்பல் முறிக்கையில்
பின்னிருந்து உன்னைக் கட்டியணைத்து
பின்னங் கழுத்தில் முத்தமிட்டு
சொல்வேன் காலை வணக்கம்!

நான் குளிக்கையில்
உன்னையும் அழுக்காக்கி
இரவுக் கோலத்தின்
மிச்சத்தை முடிப்பேன்!

சின்னச் சின்ன சில்மிஷங்களோடு
வார இறுதிகளில் சிற்றுண்டி!

டென்ஷனான வேலையில்
நீமூழ்கி எழுகையில்
மொக்கை ஜோக்சொல்லி
உன்னை சிரிக்க வைப்பேன்!

மாலை வேளையில்
நீண்ட சாலையில்
உன்கரம் பிடித்து
கணக்குப் பாடம் படிப்பேன்!

கணக்குகள் தவறாகும் போது
உன்தோளில் சாய்ந்து
மெல்லிய புன்னகையில்
ஆறுதல் தேடுவேன்!

பௌர்ணமி நாளில்
உன்னை என் மடியிலிட்டு
நிலவோடு நீபேசும் அழகை ரசிப்பேன்!

உன்இதயம் பாடும் தாலாட்டைக்
கேட்டுக் கொண்டே உறங்கிடுவேன்!

இப்படி சின்னச்சின்ன
ஆசைகள் ஏக்கங்கள் ஏராளம்!

கனவுக் கோட்டையில்!
காதலை ரசித்தேன்!
காதல் கோட்டையில்!
கனவுகளை ருசிக்க காத்திருக்கிறேன்!

அனுமதி கொடுப்பாயா
ஆலயப் பிரவேசத்திற்கு!!!

                  -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக