சனி, 5 செப்டம்பர், 2015

உறக்கம் தொலைத்தேன்

அதைத் தேடுகையில்
உன்முகவரி கிடைத்தது!

முகவரி அடைந்ததும் இதயத்
துடிப்பின் ஓசை மாறியது!

ஓசையைக் கேட்டேன் - அது
காதல் என்றது!

காதலுக்கு அர்த்தம்
தேடினேன் அகராதிகளில்
அவை உன்பெயரைக் காட்டின!

உள்ளப் பூரிப்பை முகத்தில்காண
ஆவலாய்ப் பார்த்தேன் கண்ணாடியை!

அப்போதுதான் புரிந்தது
உன்முகவரியில் என்னைத்
தொலைத்துவிட்ட உண்மை!

                    -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக