சனி, 5 செப்டம்பர், 2015

சாதிவெறி


ஓராயிரம் வலிகள் தரும்
 ஒற்றை வார்த்தை!

போலி வாழ்வை விரும்பும் 
மடையர்களின் அன்புக் குழந்தை!

இளம் உயிர்களை காவு 
கேட்கும் காட்டேரி!

இந்தச் சமூகத்தை அரிக்கும்
 கரையான் புற்று!

மனிதனை மிருகமாய் மாற்றும் 
பாரம்பரியப் பிழை!

மணவறையை பிணவறையாய் மாற்றும் 
சுடுகாட்டின் கைக்கூலி!

பிஞ்சு உள்ளங்களில் ஆறாத 
வடுக்கள்தரும் நெருப்பு!

மனிதனுக்கும் கடவுளுக்குமே 
இடைவௌி தந்த தடுப்புசுவர்!

மனிதனை அடிமையாய் அடக்கியாள 
போதிக்கப்படும் துர்போதனை!

இவ்வடிமைத்தளையை வரமாய் 
என்னும் மூடர்களின் மனக்கறை!

கொடுத்தது போதும் உயிர்பலிகள்!
நசுக்கியது போதும் பிஞ்சு உள்ளங்களை!
போதுமிந்த அடிமை வாழ்க்கை!

பெரியார் விட்டுச்சென்ற பணியை
தொடர வேண்டிய நேரமிது!
அம்பேத்கர் காணத்துடித்த மாற்றத்திற்கு
அடித்தளம் அமைக்கும் நேரமிது!

சாதிகளற்ற சமூகம் அமைக்க!
புதுப்புரட்சிப் புனையும் நேரம்வந்தது!
புறப்பட்டு வாதோழனே!
சரித்திரத்தை திருத்தி யமைக்க!!!

               -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக