கல்லைக் கண்டால் உன்னில்
ஓர் சிற்பி தெரிவான்!
ஓர் சிற்பி தெரிவான்!
காகிதத்தைக் கண்டால் உன்னில்
ஓர் ஓவியன் தெரிவான்!
ஓர் ஓவியன் தெரிவான்!
கண்ணாடியைக் கண்டால் உன்னில்
ஓர் அழகன் தெரிவான்!
ஓர் அழகன் தெரிவான்!
எப்பொருளைக் கண்டாலும் உன்னில்
ஓர் கவிஞன் தெரிவான்!
ஓர் கவிஞன் தெரிவான்!
இவையெல்லாம் தெரிந்தால்தான் உன்னில்
காதல் வந்ததென்று பொருளல்ல!
காதல் வந்ததென்று பொருளல்ல!
அமைதியாய் ஓர் நிமிடம்
உன் கண்களை மூடிப்பார்!
உன் கண்களை மூடிப்பார்!
உன் இதயத்தின் நிழல்
பிம்பமாய் தெரியும்!
பிம்பமாய் தெரியும்!
அப்பிம்பம் சொல்லும்!
நீ காதல் கோட்டையின்
அன்புச் சுவர்களுக்குள் அடைபட்ட உண்மையை!!!
நீ காதல் கோட்டையின்
அன்புச் சுவர்களுக்குள் அடைபட்ட உண்மையை!!!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக