தனியாய் நான் வருகையில்
கடமைக்கு கரைதொடும் அலைகள்!
இன்று உன்னோடு வருகையில்
மழலைபோல் துள்ளிக் குதிக்கின்றன!
கடமைக்கு கரைதொடும் அலைகள்!
இன்று உன்னோடு வருகையில்
மழலைபோல் துள்ளிக் குதிக்கின்றன!
அலைகளின் துள்ளலுக்கு காரணம்
உன்னைக் கண்ட உற்சாகமா?
அல்லது
உன்னைக் காணவந்த
நிலவைக் கண்ட பூரிப்பா?
உன்னைக் கண்ட உற்சாகமா?
அல்லது
உன்னைக் காணவந்த
நிலவைக் கண்ட பூரிப்பா?
காரணம் கேட்டேன் அலைகளிடம்!
பேச முடியாமல் வெட்கப்பட்டு
நுரைகளால் விடையை எழுதியது கரையில்!
அதை நான் படிக்குமுன்
தென்றல் அதை எடுத்துசென்றது!
தென்றல் அதை எடுத்துசென்றது!
தென்றலை சிறைபிடித்து விடையறிவேன்!
நிலவென்று விடை இருந்தால்!
உன்பாதங்களில் பணிந்து
காலமெல்லாம் உன்னிடம்
மன்னிப்பு கோர!
அந்த அலைகளை சிறைபிடிப்பேன்!
காலமெல்லாம் உன்னிடம்
மன்னிப்பு கோர!
அந்த அலைகளை சிறைபிடிப்பேன்!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக