சனி, 5 செப்டம்பர், 2015

உருகிவிட்டேன்

முழுநிலவை சாட்சியாய் வைத்து
முல்லைச்செடி பிரசவித்த
முத்துக்களைக் கண்டேன் - திருஷ்டிப் பொட்டோடு!
ஒளிவீசும் உன் விழிகளில்!

குளிரும் உன் கண்கள்!
எனக்குள் உஷ்ணம் கூட்ட!
உருகி விட்டேன் திவலைகளாய்!

அத்திவலைகளில் ஒருதுளியை
உன்இமை முடியில் ஒருநொடி
இட்டுவிடு போதும்!
சொர்க்கத்தின் வாசலை
தொட்டுவிட்ட இன்பம் பெறுவேன்!

                           -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக