கண்டுகேட்டு உண்டுயிர்த்து உழலுகின்ற வாழ்வை
யெல்லாம் வென்றுவிடும் நெஞ்சம் வேண்டும்!
காமமென்றும் காதலென்றும் காலம் வரையும்
கோலங்களை கண்டுவிடா விழிகள் வேண்டும்!
கோலங்களை கண்டுவிடா விழிகள் வேண்டும்!
உறவென்றும் பிரிவென்றும் உலகம் காட்டும்
மாயைகளை நம்பிவிடா தெளிவு வேண்டும்!
மாயைகளை நம்பிவிடா தெளிவு வேண்டும்!
மெய்யென்றும் பொய்யென்றும் பகுத்தறிய
காட்சிகளை நம்பாத நல்அறிவு வேண்டும்!
காட்சிகளை நம்பாத நல்அறிவு வேண்டும்!
கனவென்றும் நிஜமென்றும் பேதமில்லாமல்
கனவினை நனவாக்கும் நெஞ்சுறுதி வேண்டும்!
கனவினை நனவாக்கும் நெஞ்சுறுதி வேண்டும்!
இவையெல்லாம் கிடைத்த பின்பு போதுமென
திருப்தி கொள்ளும் உள்ளம் வேண்டும்!
திருப்தி கொள்ளும் உள்ளம் வேண்டும்!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக