காலையில் காதல் வந்தால்
தென்றலிடம் சொல்லி யனுப்பு!
ரோஜாக் கூட்டத்தை கொண்டு வருவேன்!
தென்றலிடம் சொல்லி யனுப்பு!
ரோஜாக் கூட்டத்தை கொண்டு வருவேன்!
உம் வாசலில் பூக்க வைக்க!
பிற்பகலில் காதல் வந்தால்
உனை நீங்காத என்
உனை நீங்காத என்
நினைவுகளிடம் சொல்லி யனுப்பு!
தகிக்கும் சூரியனுக்கு தடைபோட முகிலினைக்
கொண்டு வருவேன் உம் வாசலில்!
தகிக்கும் சூரியனுக்கு தடைபோட முகிலினைக்
கொண்டு வருவேன் உம் வாசலில்!
மாலையில் காதல் வந்தால்
மல்லிகை வாசத்திடம் சொல்லி யனுப்பு!
மூன்றாம் பிறையோ! முழுநிலவோ!
உம் எண்ணப்படி கொண்டு வருவேன்!
மல்லிகை வாசத்திடம் சொல்லி யனுப்பு!
மூன்றாம் பிறையோ! முழுநிலவோ!
உம் எண்ணப்படி கொண்டு வருவேன்!
இரவில் காதல் வந்தால்
கலையாத கனவுகளிடம் சொல்லி யனுப்பு!
உம் இலட்சியத்தை ஈடேற்ற
வருவேன்! என்றும் உறுதுணையாக!
கலையாத கனவுகளிடம் சொல்லி யனுப்பு!
உம் இலட்சியத்தை ஈடேற்ற
வருவேன்! என்றும் உறுதுணையாக!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக