சனி, 5 செப்டம்பர், 2015

வரலாற்று நாயகனுக்கு அர்ப்பணம்

பிறக்கையில் பெற்றோருக்கு முத்தானீர்
இறக்கையில் தேசத்தின் சொத்தானீர்!

புத்தகத்தில் படித்ததுண்டு
வரலாற்றில் வாழ்பவர்களின்
இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளை!

ஆனால் இன்று!!!
உலகமே காண்கிறது!
வரலாற்று நாயகனின்
இறுதிச் சடங்கினை!
கண்ணீரை சாட்சியாய் வைத்து!

சாதி மதத்தால் 
பிரிந்து நிற்கும் தேசத்திலும்!
இமயம் முதல் குமரிவரை
கண்ணீர் சிந்தாத கண்களில்லை!

உம்பிரிவை எண்ணி கணமேனும்
மனங்கனக்காத மனிதரில்லை உலகில்!

எண்ணி எண்ணி வியக்கிறோம்!
நீர் சொன்ன வார்த்தைகளை!

உம் சிந்தனைகளுக்கு
வடிவம் கொடுத்து!
நீர்கண்ட கனவையும்
எங்கள் லட்சியமாக்கி!
அஞ்சலி செலுத்துவோம்!
அழியாப் புகழடைந்த உமக்கு!!!

                    -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக