பச்சைப் புல்வௌியில்
படர்ந்திருக்கும் பனித்துளிகளை
பகலவன் பருகையிலே!
பகலவன் பருகையிலே!
ஒற்றைத் துளியில்
உன்முகம் பார்த்து
ரசித்து நின்றான்
தன்தாகம் மறந்து!
உன்முகம் பார்த்து
ரசித்து நின்றான்
தன்தாகம் மறந்து!
நீஅருகில் இருந்தால்
முடிவதில்லை அதன் ஆயுட்காலம்!
நீவிலகிச் சென்றாலோ!
அது வாழாது ஒருநொடி காலமும்!
முடிவதில்லை அதன் ஆயுட்காலம்!
நீவிலகிச் சென்றாலோ!
அது வாழாது ஒருநொடி காலமும்!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக