சனி, 5 செப்டம்பர், 2015

என் தேசத்தில் என் விருப்பம்

கடைகள் இல்லாத நடைபாதை!
கரும்புகை இல்லாத வாகனங்கள்!
மழைநீைரை சாலைகளில் தேக்காமல் 
நிலத்தடியில் சேமிக்கும் வடிகால் அமைப்பு!
தடையில்லா மின்சாரம்!
கட்டணமில்லாத கல்வி!
விலையில்லாத மருத்துவம்!
குடிசைகள் இல்லாத குப்பங்கள்!
பசியில்லாத குழந்தைகள்!
பாதுகாப்பாய் உணரும் பெண்கள்!
இணையத்தில் இருந்தாலும் தனிமனித சுதந்திரம்!
நெரிசல் இல்லாத பேருந்து பயணங்கள்!
எலிகள், கரப்பான்கள் இல்லாத ரயில் பயணம்!
சீரான சாலைகள்!
அமரர் ஊர்தியாய் மாறாத ஆம்புலன்சுகள்!
நேரத்தின் அருமை உணர்ந்த ரயில்கள்!
பெட்ரோல் டீசல் விலையைப் பொறுத்து 
மாற்றம் காணாத  விலைவாசி!
அன்னிய ஆதிக்கம் இல்லாத தொழில்வளர்ச்சி!
இலவசங்களை வெறுக்கும் மக்கள்!
சறுக்கல்கள் இல்லாத சட்டங்கள்!
ஊழல் இலஞ்சத்தை ஒழிக்கும் 
தனிமனித ஒழுக்கம்!
ஆதாயம் தேடாத அரசியல்வாதிகள்!
தீண்டாமை பார்க்காத கடவுள்கள்!
சாதிகள் இல்லாத சமுதாயம்!
மதுக்கடைகள் இல்லாத மாநிலம்!
நஞ்சு கலக்காத விவசாயம்!
உழவனை போற்றும் உள்ளங்கள்!
மனைகளாக மாறாத விவசாய நிலங்கள்!
கலப்படமில்லாத உணவுப் பொருட்கள்!
தரமான புது நூல்கள்!
வீடு தோறும் நூலகம்!
வீதி தோறும் விளையாட்டு மைதானம்!
அனைவருக்கும் சமமான கல்வி!
தாமதமாகமாத தீர்ப்புகள்!
தம்வரலாற்றை அறிந்த மக்கள்!
ஆபாசமில்லாத கலைத்துறை!
தம்கருத்தை மக்கள் மீது திணிக்காத ஊடகங்கள்!
கழிவுநீர் கலக்காத நதிகள்!
மரங்கள் நிறைந்த சாலைகள்!
அனைவருக்கும் பட்டப்படிப்பு!
வேலையில்லா பட்டதாரிகள் இல்லாத நிலை!
கருப்புப் பணத்தை பதுக்காத கரங்கள்!
வட்டி இல்லாத கடன்கள்!
அனைவருக்கும் வீடு!
ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லா சமச்சீர் சமுதாயம்!
கொள்ளை போகாத இயற்கை வளங்கள்!
ஆளில்லாத சிறைகள்!
அடிமைத்தனம் இல்லாத வாழ்க்கை!
இதுபோல் விருப்பங்கள் உனக்கும் உண்டு!
நம்மக்களை முன்னேற்றும் எண்ணங்கள் உண்டு!
நம் விருப்பங்கள் நிறைவேற!
நம் எண்ணங்கள் ஈடேற!
நமக்கு வேண்டும்!
நம் அடையாளத்தில் நமக்கென நம்தேசம்!
தமிழ் தேசம்!!!

                -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக