கார்முகில் கூடுகையில் சந்தித்தோம்!
கூடலை எதிர்பாராமல்!
வாழ்க்கைக் கனவுகளை
வார்த்தைகளில் பரிமாறினோம்!
வானவில்லின் வண்ணம் பார்த்து!
வார்த்தைகளில் பரிமாறினோம்!
வானவில்லின் வண்ணம் பார்த்து!
மறந்து போனோம்
கடந்துபோன நாட்களை!
முகிலின் முத்தத்தால்
முகம்மாறிய நிலமகளின்
நாணம் பார்த்து!
கடந்துபோன நாட்களை!
முகிலின் முத்தத்தால்
முகம்மாறிய நிலமகளின்
நாணம் பார்த்து!
அருவியாய் பொழியும் மழைபோல்
அன்பைப் பொழிந்தோம்!
அன்பைப் பொழிந்தோம்!
உன்அன்பு மழையில்
நான் நனைந்து!
நான் நனைந்து!
ஆனந்தக் கண்ணீரை
உதிர்க்கையிலே!
காரணம் நீயென்றறிந்து
பரிசைத் தந்தாய்
என்கண்களில் கண்ணீரை விரும்பாமல்!
பரிசைத் தந்தாய்
என்கண்களில் கண்ணீரை விரும்பாமல்!
நீபொழிந்த அன்புமழையில்
அழகாய் வளர்ந்த
நினைவு களென்னும் விருட்சம்
இன்று தூறலை சிந்த!
அழகாய் வளர்ந்த
நினைவு களென்னும் விருட்சம்
இன்று தூறலை சிந்த!
இனிமையாய் அனுபவிக்கிறேன்!
நீதந்த தனிமை
என்னும் பரிசை!
நீதந்த தனிமை
என்னும் பரிசை!
--தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக