சனி, 5 செப்டம்பர், 2015

சருகாகிப் போனேன்:::

கிளையோடு இணைந்து
வண்ணமலர்களை பிரசவித்து!

காற்றோடு கொஞ்சிமகிழ
ஆசையாய் துளிர்த்த இலையொன்று!

நிறைவேறாத கனவுகளோடு
சருகாய்மாறி காத்திருக்கிறது!

தன்னை விரும்பாத கிளையின்
மகிழ்ச்சிக்கு உரமாக!

                 -- தல்லிதாசன்

1 கருத்து: