சனி, 5 செப்டம்பர், 2015

மரணத்திற்கு மரணம்

கனவுகள் காணச் சொன்னீர்!
எங்கள் உறக்கம் கலைந்தது!
உற்சாகம் பிறந்தது!

அக்னிச் சிறகுகள் தந்தாய்
தகர்க்க முடியாத தடைகளை
சாம்பலாய் பொசுக்கி விட!

ஏழ்மையைவென்று ஏற்றம் கண்டீர்!
எம்மைப் போன்றோருக்கு
எடுத்துக் காட்டாய் நின்றீர்!

நீசுமந்த நாளிதழ்!
உன்படத்தை  சுமக்க ஏங்கின!

விருதுகளெல்லாம் விருது பெற்றன!
உம்கைகளில் தவழும் போது!

பதவிகள் பெருமை கொண்டன
நீர்அவற்றை அலங்கரித்த போது!

அணு விஞ்ஞானி!
அற்புத பேராசிரியர்!
நாட்டின் முதல் குடிமகன்!

அனைத்தையும் தாண்டி
அன்பான மனிதராய்
எங்கள் மனதில் நின்றுவிட்டீர்!

நிச்சயம் மரணத்திற்கு
மரணம்தான்  உம்விசயத்தில்!

                      -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக