சனி, 5 செப்டம்பர், 2015

குமுறல்கள்

வெட்டி வீ்ழ்த்த மரங்கள்
இல்லையென்றா
மனிதத் தலைகள் கேட்கிறாய்!

கூடிவாழ்ந்த குலத்தினை
குள்ளநரிகள் வேட்டையாடவா
மதிமறந்து சூழ்ச்சியை ஏற்றாய்!

உயிரில்லாத சுவரின்
சித்திரம் பெற்ற மரியாதையை
உயிருள்ள மனிதருக்கு மறுத்தாய்!

மறந்து போனாயே மனிதா
நம்மை படைத்தது இயற்கையென்று!

கடவுள் என்றாய்!
மதம் என்றாய்!
சாதி என்றாய்!
குலம் என்றாய்!
இன்று கூனிக்குறுகி நிற்கிறாய்!
குட்டுப்பட்டதை அறியாமல்!

ஊரை எரித்து தேர்வலம்!
சடலங்கள் மீது ஊர்வலம்!
இவற்றையா கேட்கிறான் உன்கடவுள்!

அவன்கேட்பது உள்ளத்தின் அன்பு!
அதுபுரியாமல் ஆடுகிறாய் ஆணவத்தில்!

கல்லை கடவுளாய்க்
கும்பிடும் வீணர்களே!
சாதி பேதமின்றி
மனிதரை மதியுங்கள் மனிதர்களாக!

மனதில் அமைதி கிட்டும்!
அந்த அமைதியில்
ஆண்டவணைக் காணலாம்!

                          -- தல்லிதாசன்

2 கருத்துகள்: