சனி, 5 செப்டம்பர், 2015

மௌனம்

தென்றலின் மௌனம் மலருக்கு வலி!
கடலின் மௌனம் கரைக்கு வலி!
மேகங்களின் மௌனம் பூமிக்கு வலி!
வேர்களின் மௌனம் இலைகளுக்கு வலி!
அருவிகளின் மௌனம் நதிகளுக்கு வலி!

இவையாவும்!

வலியை வௌியே சொல்லாமல்
உள்ளுக்குள் உருகுவது உண்மை!

என்னால் தாங்க முடியவில்லை
உம்மௌனம் தரும் வலியை!

முள்ளோ? மலரோ! எதுவாயினும்
ஏற்றுக் கொள்ளும் பக்குவமுண்டு!
மௌனம் மட்டும் வேண்டாம்!!!
                      -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக