சனி, 5 செப்டம்பர், 2015

கோயிலில் குரங்குகள்

எம்மக்கள் கட்டிய கோயிலில்
ஆண்டவனைக் காணச் சென்றேன்!

வாயிலை மறித்து நின்றது
வாரணாசிக் குரங்கு ஒன்று!

காரணம் கேட்டேன்!
கோயில் தனக்கே சொந்தமென்றது!

சத்தம்கேட்டு வேகமாய் வந்தது
உள்ளிருந்த மற்றோர் குரங்கு! அவற்றுக்குள்
ரகசியம்பேசி வழிவிட்டன எனக்கு!

கையில் இருந்த பொருட்களை
பறித்தது ஒரு குரங்கு!

ஏனிந்த விபரீத மென்று!
கடவுளிடம் முறையிட சென்றேன்!
அங்கேயும் ஓர் குரங்கு!
ஆண்டவனுக்கு ஏஜென்ட் என்றது!

புரியாத மொழியில் பிதற்றியது
என் பிரார்த்தனையை கலைக்க!

முறையிட வந்த இடத்திலேயே குறையா?
என்று நொந்தபடி திரும்ப!

ஒய்யார மேடையிலே வாலைச்
சுருட்டி அமர்ந்தது ஓர்குரங்கு!
தன்னை வணங்கச் சொன்னது
தானே கடவுள் என்று!

அதையும் பலர் வணங்கினர்!
அதுகூறிய கதைகளில் மயங்கி!

காமத்தைக் கடந்து
யோகத்தை அடையும் தத்தவத்தை விளக்கும் கோவிலில்!
கலவிக் கல்வி பயில்கின்றன
சில குரங்குகள்!

அழகாய்ப் பேசி மறைத்தன!
அக்குரங்குகளை விரட்டும் குச்சியாம்
என் சுயமரியாதையை!

உளவுபார்த்து உருவின நான்
அறியாமல் என்உடை வாளை!

குரங்குகள் தெய்வமானதால்
கடவுள் கல்லாகிப் போனானா?
அல்லது!
கடவுள் கல்லானதால்
குரங்குகள் தெய்வம் ஆனதா?

விடை எதுவானாலும்!
குரங்குக்கு மிஞ்சியது கொண்டாட்டம்!
எங்கள் குலத்துக்கு மிஞ்சியது அவமானம்!

                -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக