வியர்வையும் கண்ணீரும்
இயல்பில் ஒத்த இருதுளிகள்!
அவற்றின் வேற்றுமைகள் அறிவாயோ?
இயல்பில் ஒத்த இருதுளிகள்!
அவற்றின் வேற்றுமைகள் அறிவாயோ?
கண்ணீர், துன்பத்தின் வௌிப்பாடு!
வியர்வை இன்பத்திற்கான முதலீடு!
வியர்வை இன்பத்திற்கான முதலீடு!
காலத்தின் ஓட்டத்தில்
காற்றோடு கரைந்து போவது கண்ணீர்!
காலத்தால் அழியாத
காற்றோடு கரைந்து போவது கண்ணீர்!
காலத்தால் அழியாத
சரித்திரம் படைப்பது வியர்வை!
உனக்கு மட்டுமல்ல உன்நிழலுக்கும்
துன்பம் தருவது கண்ணீர்!
உனக்கும் நீவாழும் நிலத்துக்கும்
புன்னகை சேர்ப்பது வியர்வை!
துன்பம் தருவது கண்ணீர்!
உனக்கும் நீவாழும் நிலத்துக்கும்
புன்னகை சேர்ப்பது வியர்வை!
கலக்கம் ஏன் தோழனே!
உன்துன்பம் போக்கும் மருந்து
கண்ணீரல்ல!
இன்பத்தின் வாசலைத் தட்டுகின்ற
வியர்வைத்துளி!!!
கண்ணீரல்ல!
இன்பத்தின் வாசலைத் தட்டுகின்ற
வியர்வைத்துளி!!!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக